காஜல் அகர்வால் டாப் ஹீரோ ஒருவர் கமிட் ஆன படத்தில் நடிக்க முடியாது என நிராகரித்த விஷயத்தை, முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் தேஜா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 30 வயதை தாண்டியும், முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால்.  திரிஷா நயன்தாராவிற்கு பின், அதிக காலம் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் கதாநாயகியாக இருப்பவர். மேலும் அஜித் - விஜய் என பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இதனால் தற்போது, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.   சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.  திருமணம் குறித்து கேள்வி எழுப்பினால் நேரம் வரும்போது தனக்கு பிடித்தவரை பார்த்து,  திருமணம் செய்து கொள்வேன் என இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.

இவர் நடிப்பில் ஹிந்தி ரீமேக்கான உருவாகியுள்ள 'பாரிஸ் பாரிஸ் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெலுங்கில்  'சீதா' மற்றும் தமிழில்  'இந்தியன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தெலுங்கில் உருவாகும் 'சீதா' படத்தின் கதையை,  இயக்குனர் தேஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பே இவரிடம் தெரிவித்ததாகவும்,  இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடனே காஜல்  இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். பின் இந்த கதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான பெல்லாம்கொண்ட ஸ்ரீனிவாஸ்சை  ஹீரோவாக  வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள இயக்குனர் தேஜா, அந்த ஹீரோ யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.