தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட, நல்ல மாப்பிளை கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவேன் என தெரிவித்திருந்தார். மேலும் இவருடைய குடும்பத்தினரும் காஜலுக்கு ஏற்ற போல் ஒரு மாப்பிளையை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் காஜலை மாலையும் கழுத்துமாக ரசிகர்கள் பார்க்கலாம் என்பது உறுதி.

இந்நிலையில் காஜல் அகர்வால் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தினருடன் சென்று ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் தலையில் பூ கூடையை சுமந்து சென்று சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார். 

இந்த தொழுகை, காஜலின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஜல் தலையில் பூ கூடையை சுமந்து சென்று, அஜ்மீர் தர்காவில் வழிப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதே போல் காஜலின் ரசிகர்கள் பலர், இவருடைய வேண்டுதல் நிறைவேற தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.