ஜூன் மாதத்தில் தன்னிடம் வாங்கிய கால்ஷீட்டை ‘இந்தியன் 2’ குழுவினர் காலவரையறையின்றி மீண்டும் ஒத்தி வைத்ததால், ‘என்னை ஆளை விடுங்க சார். நான் வேற படங்கள்ல நடிச்சி பொழச்சிக்குறேன்’என்று தயாரிப்பாளர் தரப்புக்கு நடிகை காஜல் அகர்வால் மெசேஜ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

கமலின் அரசியல் செயல்பாடுகள், ஷங்கருடன் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு ஆகியவற்றால் ஒரு சில நாட்களே நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்து திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இப்படத்தில் கமலுடன் கஜல் அகர்வால் ஓரிரு நாட்களே நடித்திருந்த நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தகவலும் இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் காஜலால் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் தரமுடியவில்லை.சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் முதல் முறையாக இப்படி ஒரு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பதால் அது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தார் காஜல். இப்படத்தை விட்டு வெளியேறாவிட்டால் ஏற்கனவே கமிட் ஆகி நடித்து முடித்திருக்கும் படங்கள் தவிர்த்து 2019ல் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாக நிலை.அவரின் தவிப்பைப் புரிந்துகொண்ட லைகா நிறுவனம் மே மாதம் மத்தியில் காஜலைத் தொடர்புகொண்டு கமலிடம் கறாராகப் பேசிவிட்டோம். ஜூன் இறுதிக்குள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அதற்கு முன்னதாக ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் உங்களுக்குப் படப்பிடிப்பு இருக்கும் என்று தெரிவித்திருந்தனராம். ஆனால் வழக்கம்போல் அடுத்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் நொந்துபோன காஜல் தயாரிப்பாளருக்கு அனுப்பிய நீண்ட மெஸேஜ் ஒன்றில்,...நான் வேற படங்கள்ல நடிச்சி பொழச்சிக்குறேன். என்னை விட்டுடுங்க சார்.'காஜல் அகர்வால்னு ஒருத்தி சினிமாவுல இல்லைன்னு நினைச்சுக்கங்க சார்’என்று அழுது புலம்பியிருக்கிறாராம்.