இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அடையாளம் காணப்பட்டவர் காஜல் அகர்வால். 

ஆனால் இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தி, தெலுங்கு படங்கள் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தன.
 
பின்னர், மும்மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், தமிழில் பாரீஸ் பாரீஸ், இந்தியன்-2 படங்களிலும், தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

இப்படி, நேரம் காலம் பார்க்காமல் நடித்துவரும் அவருக்கு, வயதாகிக் கொண்டே போவதால் காஜல் அகர்வாலுக்கு  திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரமாகவுள்ளனர். அவருக்கு பல மாப்பிள்ளைகள் பார்த்தும், எதுவும் செட் ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதைக் கேட்டவர்கள் காஜலுக்கு மாப்பிள்ளை ரெடி! போன்று பேசி வந்தனர்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி பரவி வருகிறது. அந்த மாப்பிள்ளையை காஜல் தேர்வு செய்யவில்லையாம். மாறாக அவரின் பெற்றோர் பார்த்து காஜலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்களாம்.

ஏற்கெனவே, திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், அவர் தொழில் அதிபரை மணக்க உள்ளாராம்.

முன்னதாக அவரின் தங்கையும், நடிகையுமான நிஷாவும் தொழில் அதிபரை தான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால், தனக்கு விரைவில் திருமணம் என்றபோதே யாராவது தொழில் அதிபராகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்தனர். அது ஏன் நடிகைகள் எல்லாம் தொழில் அதிபர்களையே திருமணம் செய்கிறார்கள்? என்பதுதான் நமக்கும் புரியவில்லை.