வெற்றிடம்

ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அத்தியாயத்தை துவக்கி விட்டார்.அவர் அரசியல் பேசும் பேச்சுகள் கருத்துகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.அதுவும் குறிப்பாக எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு வெற்றிடம் இருக்கிறது அதனை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன் என்று பேசினார்.இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வணக்கம்

இந்த நிலையில் டிவிட்டரில் மட்டும் கணக்கு வைத்திருந்த ரஜினிகாந்த் தற்போது பேஸ்புக்கிலும் இன்ஸ்ட்டாகிராமிலும் கணக்கு துவாக்கியுள்ளார்.பேஸ்புக்கில் வணக்கம் என்று அவர் போட்ட பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வரவேற்பு

இதில் இன்ஸ்டாவில் நான் வந்துட்டேன்னு சொல்லு என்று அவர் பதிவிட்ட முதல் போட்டோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை ரஜினியை 193 ஆயிரம் பேர் வரை பின் தொடர்கின்றனர்.

முறியடிப்பாரா

தென்னிந்திய சினிமாவில் அதிகம் பாலோயர்ஸ் கொண்ட காஜலின் 6.9மில்லியன் சாதனையை விரைவில் ரஜினி முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.காஜலுக்கு அடுத்த இடத்தில் ஸ்ருதி ஹாசன் உள்ளார்.அவரை 6.8 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர்.