நடிகை காஜல் அகர்வாலுக்கு அவரது காதலர் கெளதம் கிச்சலுவிற்  கும் அக்டோபர் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனி மூன் சென்று திரும்பியுள்ள காஜல், தற்போது தான் நடித்து வரும் படங்களில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். 

இந்நிலையில் காஜல் அகர்வால் ஏற்கனவே, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், 'இந்தியன் 2 ' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், கொரோனா பிரச்சனை சற்று தணிந்துள்ளதால் விரைவில் காஜல் அடுத்தடுத்து நடிக்க உள்ள படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட, ஹாரர் காமெடி படத்தில் தற்போது காஜல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  ’கோஸ்ட்டி’ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஃபேண்டசி ஹாரர் படமான இந்த படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 24 காமெடி நடிகர்கள் ஒன்றாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் வித்தியாசமான வகையில் உருவாக உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.