இயக்குனர் வெங்கட் பிரபு,  நடிகர் சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியான போதிலும், ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது இன்னும் துவங்காமல் உள்ளது. நடிகர் சிம்புவும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் வெங்கட் பிரபு, 'மாநாடு' படத்தை கிடப்பில் போட்டு விட்டு, வெப் சீரியஸ் இயக்குவதில் கவனம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் தற்போது நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காஜல் அகர்வால் ஆகஸ்ட் மாதல் துவங்க உள்ள 'இந்தியன் 2 ' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  இவர் நடிப்பில்  விரைவில் குயின் பட ரீமேக் ஆக எடுக்கப்பட்டுள்ள 'பாரிஸ் பாரிஸ்', ஜெயம்ரவியுடன் நடித்துள்ள, 'கோமாளி'  உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

ஏற்கனவே பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி, நடிகர் நடிகைகள், வெப் சீரிஸில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலும் வெப் சீரிஸில் நடிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதே போல் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க நடிகை சமந்தாவிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.