தொடர்ந்து 100 நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற சவால் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  அதில் நடிகை காஜல் அகர்வாலும் தற்போது இணைந்துள்ளார்.

சமீப காலமாக நடிகைகள் அதிகப்படியான உடற்பயிற்சிகள் செய்வதில்  கவனம் செலுத்தி வருகின்றனர். சில நடிகைகள் 6 பேக் வைக்கும் அளவிற்கு, கடின உடற் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில்,  நடிகை சமந்தா, ரெஜினா, போன்ற நடிகைகள் அதிக உடற்பயிற்சி செய்வதில் தொடர்ந்து ஆர்வம் கட்டி வருகிறார்கள்.

 இளம் நடிகைகள் கூட  தங்களை பிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் காஜல் அகர்வாலும் 30 வயதை கடந்துவிட்ட நடிகைகளில் ஒருவராக இருப்பதால், மேலும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த 100 நாள் உடல்பயிற்சி சவாலில் இறங்கியுள்ளார்.