Asianet News TamilAsianet News Tamil

’இந்தியன் 2’ விலிருந்து எஸ்கேப் ஆவது எப்படி?...கலக்கத்தில் காஜல் அகர்வால்...


ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் தனது கால்ஷீட் வீணடிக்கப்படுவதால் அப்படத்திலிருந்து விலகிவிடலாமா என்று காஜல் அகர்வால் குழம்பிப்போயுள்ளதாகத் தெரிகிறது.

kajal agarval in confusion
Author
Chennai, First Published Feb 26, 2019, 9:50 AM IST

ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் தனது கால்ஷீட் வீணடிக்கப்படுவதால் அப்படத்திலிருந்து விலகிவிடலாமா என்று காஜல் அகர்வால் குழம்பிப்போயுள்ளதாகத் தெரிகிறது.kajal agarval in confusionகமலின் அரசியல் செயல்பாடுகள், ஷங்கருடன் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு ஆகியவற்றால் ஒரு சில நாட்களே நடந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இப்படத்தில் கமலுடன் கஜல் அகர்வால் ஓரிரு நாட்களே நடித்திருந்த நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தகவலும் இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் காஜலால் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் தரமுடியவில்லை.kajal agarval in confusion

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் முதல் முறையாக இப்படி ஒரு தர்மசங்கடத்தில் சிக்கி இருப்பதால் அது குறித்து வெளியே சொல்ல முடியாமல் தவித்துவருகிறாராம் காஜல். இப்படத்தை விட்டு வெளியேறாவிட்டால் ஏற்கனவே கமிட் ஆகி நடித்து முடித்திருக்கும் படங்கள் தவிர்த்து 2009ல் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாக நிலை இருக்கிறதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios