நடிகர் கார்த்தி, தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'கைதி'. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி, கார்த்தியின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, தற்போது நடிகர் கார்த்தி, 'கைதி' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என உறுதி செய்துள்ளார்.  ஏற்கனவே தீபாவளிக்கு, நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து 'பிகில்' திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், 'கைதி' திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்த படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 64 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.