தீபாவளியை முன்னிட்டு முன்னிட்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் 'கைதி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமிழில் முதல்முறையாக நடிக்கும் நடிகை ராஷ்மிக்கா நந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லர் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த 'கைதி' இன்று வெளியாகியது. படத்தின் ஆரம்பம் முதலே விறுவிறுவென செல்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஒரு பெரிய கதாநாயகன் படத்தில் கதாநாயகி, ரொமான்ஸ், டூயட் என  எதுவும் இல்லாமல் இருந்தாலும் அதை ஒரு குறையாக இல்லாத அளவிற்கு இயக்குனர் படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அப்பா-மகள் சென்டிமென்டை அழகாக கூறியிருக்கும் கைதி படம் கார்த்தியின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதாக அவரது ரசிகர்கள் கடந்து நடுநிலையாளர்களும் கொண்டாடி வருகின்றனர்.

கார்த்தி படங்களிலேயே சிறந்ததாக வந்திருக்கும் இந்த படம், தரமான தீபாவளியை தங்களுக்கு தந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தளபதியின் பிகிலுடன் தீபாவளிக்கு மோத வந்த கார்த்தியின் 'கைதி' நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: பிகிலை தட்டித்தூக்கும் கைதி..! அட்லீயை வறுத்தெடுக்கும் விஜய் வெறியர்கள்..!