நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள 'மாநகரம்' படத்தின் படப்பிடிப்பிற்காக உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக லண்டன் சென்றுள்ள அவர் நாளை அல்லது நாளை மறுநாள், அவரின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இந்த படத்தை தொடர்ந்து... கெளதம் கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைந்து நடிக்க உள்ளார். 

இந்நிலையில் தற்போது சிம்பு பாடியுள்ள 'காதல் கடிக்குதே' என்கிற பாடல், ரெகார்டிங் செய்யப்பட்டபோது எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகர் சிம்புவும் தோன்றியுள்ளார். எனவே சிம்பு ரசிகர்கள் பலர் இது தான் நியூ லூக்கா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

'காதல் கடிக்குதே' மிக அருமை... முழு பாடலுக்கு வெயிட்டிங் என கூறி வருகின்றனர்.

 


 

View this post on Instagram

#KadhalKadikudhe - Releasing in few days!

A post shared by Silambarasan TR (@iam_str) on Apr 23, 2019 at 5:54am PDT