Asianet News TamilAsianet News Tamil

இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் 'காதல் என்பது பொதுவுடமை 'படம் தேர்வு!

2023 இந்த வருட, இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் 'காதல் என்பது பொதுவுடமை' என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 

kadhal enbathu pothuvudamai  Film Selected at Indian Panorama 54th World Film Festival mma
Author
First Published Oct 24, 2023, 8:20 PM IST | Last Updated Oct 24, 2023, 8:20 PM IST

நவம்பர் 20 முதல் 28  தேதி வரை கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதில்  "காதல் என்பது பொதுவுடமை " என்கிற திரைப்படமும் ஒன்று  இது ஒரு நவீன காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள் ,  மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள்  நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது. இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
இவர் 'லென்ஸ்", "மஸ்கிடோபிலாஷபி", "தலைக்கூத்தல்",  ஆகிய படங்களின் இயக்குநர் ஆவார்.

இந்த படத்தில்  லிஜோமோல், ரோகிணி, வினீத் , கலேஷ் ராமானந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர். 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' இயக்குநர் ஜியோ பேபி வழங்க , மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் நாராயணன் இப்படத்திற்கு.  உமா தேவி இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்ற,  டேனி சார்லஸ் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios