நடிகர் விக்ரம் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கடாரம் கொண்டான்"  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்,  இந்தப் படத்தின் டப்பிங் பணியையும் நடிகர் விக்ரம் நேற்று முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை மூன்றாம் தேதி வெளியாகவுள்ளதாகவும், ஜூலை 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், மீரா மிதுன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.