தனது ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் விரைவில் வெளிவர விருக்கும் ‘கடாரம் கொண்டான்’அப்படியே ஒரு ஆங்கிலப்படம் போலவே இருக்கிறது என்று கமல் புகழ்ந்துள்ள நிலையில் அது ஒரு ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தனது ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் விரைவில் வெளிவர விருக்கும் ‘கடாரம் கொண்டான்’அப்படியே ஒரு ஆங்கிலப்படம் போலவே இருக்கிறது என்று கமல் புகழ்ந்துள்ள நிலையில் அது ஒரு ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஆண்டு வெளியான ‘சாமி 2’ மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்க, விரைவில் வெளியாக உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். விக்ரமும் இப்படத்தை நம்பியே காத்திருக்கிறார்.

 கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், அபி என இரண்டு இளம் நடிகர், நடிகை நடித்திருக்க, விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஆங்கில பட பாணியில் படமாக்கப்பட்டிருப்பதாகவு கூறப்படுகிறது.

 இந்த நிலையில், ‘கடாரம் கொண்டான்’ ஆங்கிலப் படம் ஒன்றில் காப்பி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘Point Blank’ என்ற ஆங்கிலப் படத்தின் ஜெராக்ஸ் தான் இந்த ‘கடராம் கொண்டான்’ என்று கூறப்படுகிறது. ஆனால், அப்படத்தின் உரிமையை பெற்று படமாக்கியிருக்கிறார்களா, அல்லது அவர்களுக்கு தெரியாமல் உருவி இந்த படத்தை எடுத்திருக்கிறார்களா, என்பது படம் ரிலீஸான பிறகு தான் தெரியும். ராஜேஷின் இதற்கு முந்தைய படமான ‘தூங்காவனமும்’ வெளிநாட்டு திரைப்படம் ஒன்றிலிருந்து தூக்கப்பட்ட கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.