ஜென்டில் மேன் இமேஜுடன் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி மிக சமீபகாலமாக தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி தனது மக்கள் செல்வன் பட்டத்துக்கு டேமேஜ் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இன்று காலை கோடம்பாக்கத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியபோஸ்டர் ஒன்று, முதல் வார்த்தையை சஸ்பென்சாக டேஷ் போட்டுவிட்டு ...போட ஒரு பொண்ணு வேணும்’ என்று ஒட்டப்பட்டு பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அது ஒரு சினிமா தொடர்பான போஸ்டர் என்று யூகிக்கப்பட்டாலும் அந்த ஆபாச வாசகங்களைத் தாண்டி வேறு எந்த க்ளூவும் இல்லாததால் குமுறிக் கொந்தளித்து வலைதளங்களில் அந்த போஸ்டர்களைப் பகிர்ந்தவர்களும் கூட யாரைத்தான் திட்டுவது என்று தெரியாமல் தத்தளித்து வந்தனர்.

இந்நிலையில் அது ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற படத்தின் போஸ்டர் அது என்பதும் அப்படத்தை பி.ஆனந்தராஜன் என்பவர் இயக்குவதாகவும் அதன் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வந்திருக்கிறது. சரி... அதுக்கு விஜய் சேதுபதி என்னங்க செய்வார். அவரா கடலை போட பொண்ணு கேட்டார் என்கிறீர்களா? அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பவரே சாட்சாத் விஜய் சேதுபதியேதான். 

காலையில் கொடூர அர்த்தத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் சேதுபதி இக்காரியத்தில் இறங்கினாரா?