நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. காதல் கதையை மையமாக வைத்து, இயக்குனர் சந்தீப் வாங்கா இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, அணைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனவே இப்படத்தை, தமிழ், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினார்.

அந்த வகையில், தமிழில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில், E4 என்டர்டயன்மென்ட்  நிறுவனம், 'வர்மா' என்கிற பெயரின் இந்த படத்தை தயாரித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வரவில்லை என கூறி நிராகரித்ததுடன், இப்படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக பட தரப்பு அறிவித்தது. 

தற்போது மற்றொரு இயக்குனரை வைத்து 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியில் உருவாகியுள்ள, அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் 'கபீர் சிங்' படத்தின் ட்ரைலர் வெளியாகி, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். ஷாலினி பாண்டே நடித்த வேடத்தில் நடிகை கியார அத்வனி நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இதோ...