சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படம் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 இன்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விஸ்வநாத்துக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினியும், அவரது மகள் தன்ஷிகாவும் சென்னை வரும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும் கேரக்டரில் நடித்த விஸ்வநாத், சாஜோஸ் இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். 

சாஜோஸ் ஏற்கனவே 'காக்கா முட்டை' மணிகண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஸ்வநாத் தமிழ் பேசும் ஐடி ஊழியராக நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு மும்பை மற்றும் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.