இந்த ஆண்டு வெளியானதில் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது கபாலி தான்.
இந்த படத்தை பொறுத்தவரை அதிக லாபம் கொடுத்த படங்களில் இந்த படமும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கபாலி படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும், ஒரு மாதத்திற்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் நிரம்பி வழிந்து, விநியோகிஸ்தர்களை சந்தோஷப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ரஜினியை சந்தித்த தாணு, 20 கோடி வரை கபாலி படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்துள்ளாராம்.;
இதனால் கோபமான ரஜினி கடும் அப்சட்டில் இருப்பதாக கூற படுகிறது.
ஆனாலும், தற்போது சௌந்தர்யா இயக்கும் புது படத்தை தாணு தயாரிக்கிறார். ஆனால் இதற்கு ரஜினி முழு மனதோடு சம்மதம் தெரிவிக்கவில்லை என திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
