Kaavi opposes me because I wear black - Kamal
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாகவும், இந்து முன்னணியினர் கமலை கைது செய்யவேண்டும் என்று மனு கொடுத்தது தொடர்பாகவும் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு நேற்று விளக்கமளித்தார்.
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் அவரஒய் கைது செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது.
ஆரம்பம் முதலே பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்ப்புகளை பெற்றுவந்த பிக்பாஸ் தமிழ்த் தாய் வாழ்த்தை கேலி செய்யும் விதத்திலும் நிகழ்ச்சியை அமைத்திருந்தது.
சமூக வலைத்தளங்களில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அதில் பங்கேற்றுள்ளவர்கள் சர்ச்சையாக பேசுவதாகவும் கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர்,
இது ஒரு இலுமினாட்டி ஷோ என்றும், வெளிநாட்டில் பிப் பிரதர் என்று ஒலிபரப்பட்ட நிகழ்ச்சியே இந்தியாவில் பிக் பாஸாக உள்ளது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றிய பல்வேறு பதற வைக்கும் தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த கமல் பிக்பாஸ் சர்ச்சை குறித்து கூறியது:
“தமிழ்த்தாய் வாழ்த்தை கேலி செய்யவில்லை. தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து கற்றுக் கொடுக்கப்பட்டது.
நான் வாழும் சமூகத்தில் “சாதி” என்ற கேவலமான வார்த்தை இருக்கத்தான் செய்கிறது. அதனை உங்களால் ஒழிக்க முடிந்ததா?
சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறில்லை. அதனை முதலில் நான் தான் கூறினேன்.
முத்தக்காட்சியில் இல்லாத சீரழிவு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளதா?
மேலும், சட்டம் என்னைக் காக்கும் நம்பிக்கை உள்ளது.
அனைத்து துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.
நான் கருப்புச்சட்டை போட்டிருப்பதால் காவி என்னை எதிர்க்கிறது. தசாவதாரம் எடுத்தால் வரவேற்கிறார்கள். விஸ்வரூபம் எடுத்தால் தடுக்கிறார்கள்.
சினிமாவில் சென்சார் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான், பிக்பாஸில் ஏன் சென்சார் வேண்டும்.
அடுத்தவன் வீட்டில் என்ன தவறு நடக்கிறது என்று தெரிந்தால் அந்த தவறை செய்யக்கூடாது என்று நம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவோம் என்று அவரது தனி பானியில் விளக்கமளித்தார்.
