Asianet News TamilAsianet News Tamil

KaathuVaakula Rendu Kaadhal: கதிஜாவாக மாறி நகம் கடிக்கும் சமந்தா... வெளியானது செகண்ட் லுக் போஸ்டர்!

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் சமந்தாவின் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கதிகஜா என்கிற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

kaathuvaakula rendu kaadhal samantha look will be released
Author
Chennai, First Published Nov 15, 2021, 1:29 PM IST

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும், சமந்தாவும், விஜய் சேதுபதியுடன் தனித்தனியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஒன்றாக இணைந்து நடித்ததில்லை. இந்நிலையில் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார்.

kaathuvaakula rendu kaadhal samantha look will be released

குறிப்பாக நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் அப்டேட் பல நாட்களுக்கு பின் நேற்றைய தினம் வெளியானது. அதில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், வெளியிட்ட நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

kaathuvaakula rendu kaadhal samantha look will be released

இந்த போஸ்டரில் சமந்தா அழகிய மாடர்ன் உடையில், நகம் கடிப்பது போல் உள்ளது இவரது பெயர், கதிஜா என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் பெயர், Rambo'  என்றும் இதற்க்கு  R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என விரிவாக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கியுள்ளது மட்டுமின்றி 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து, ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நிறைவுபெற்ற நிலையில், விரைவில் ஓடிடி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அடுத்தடுத்து போஸ்டர் வெளியாகி வருகிறது. அதே போல் இன்றைய தினம், நயன்தாரா குறித்த போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios