kathuvakkula rendu kadhal கத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின்  டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நயன்தாரா தனது சொந்த குரலில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சமந்தா ஆகிய இரு நாயகிகளுக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித் குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதோடு இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், காதீஜா எனும் பெயரில் சமந்தாவும், கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துள்ளனர். இது குறித்து சமீபத்தில் வெளியான மூன்று போஸ்டர்களும் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. 

இந்நிலையில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் கிறிஸ்துமசை முன்னிட்டு டிசம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு முடிந்து இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நயன்தாரா தனது சொந்த குரலில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இது குறித்து ட்வீட் செய்துள்ள விக்னேஷ் சிவன்; கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனத்தை சொந்த குரலில் பேசுவது மிகுந்த சந்தோசம் என குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…