அயன், மாற்றான் படங்களை அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் "காப்பான்". இதற்கு முன் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஏற்கனவே இந்த படத்தில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று சரியாக 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

படக்குழு அறிவித்தது போலவே, தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரை நாட்டு பற்றோடு இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலரில் இருந்து தெரிகிறது.

இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ட்ரைலர் இதோ...