kaala screening after Silent tribute Tuticorin
தூத்துக்குடியில் காலா திரைப்படம் வெளியான திரையரங்குகளில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிலும், தடியடியாலும் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி நேரில் சென்று நலம் விசாரித்து, நிதயுதவியும் வழங்கினார்.

