kaala movie scene paper leek the huma qureshi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் காலா, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 28 ந் தேதி தொடங்கியது.

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே, இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பெயர் வெளியாகி, ரஜினி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்நிலையில் காலா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியானது. இதை தொடர்ந்து படத்தின் பாடல்களும் வெளியானதாக கூறப்பட்டது.

தற்போது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் 'ஹுமா குரோஷி' இந்த படத்தில் இவருடைய சீன் பேப்பரை ட்விட்டரில் கசிய விட்டு, நான் சரீனாவாக மாறப்போகிறேன் என்று கூறியுள்ளார்.