kaala first schedule completed

கடந்த வருடம் கபாலி என்கிற படத்தின் மூலம் உலக மக்கள் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திரும்பியவர் இயக்குனர் ரஞ்சித்.

தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டாரை வைத்து 'காலா கரிகாலன்' என்கிற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தாராவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மும்பையில் எடுக்க வேண்டி இருந்த படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால், நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடைபெற உள்ளதாகவும், இதற்கு இடையே ரஜினிகாந்த், 18 மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம்.