Kaala banned in European countries

எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.

எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.

எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.

கடந்த சில மாதங்களாக அவருடைய "ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை" நேற்று(30.05.18) கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!

கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை!.

எமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் "ஒரு நடிகனாக தான் போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்" என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!

இவற்றின் வெளிப்பாடாக சுவிஸ் நாட்டில் இனிமேல்தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.தயவு செய்து இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்,இப்படத்தினை ஓடும் அன்பர்களே நீங்களும் தமிழர்கள்தானே சற்று சிந்தியுங்கள் இதை விளையாட்டாக கொள்ளவேண்டாம்,

இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்ட்ங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!

தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் " போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்" எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!

இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேம். "காலா" திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!

இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்கள்!

விசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் ! உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்! உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் !

இப்படி இந்தப் படத்தை தடை செய்த தமிழ் உணர்வு மிக்க ஐரோப்பிய தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. இவர்களிடமிருந்து வளைகுடா வாழ் தமிழர்கள் நிறைய ஒற்றுமையை கற்க வேண்டியுள்ளது. நாம் வாங்கிய டிக்கெட் தான் ரஜினியை இந்த அளவு உயரத்திற்கு உயர்த்தியது. குழு உறுப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நம்மைப் பொறுத்தவரை காலாவை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

காலா படத்தை பார்க்கவேண்டாம் என யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. என்னை பொருத்தவரை எனது நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தியேட்டருக்கு செல்லாமல் “காலா” படத்தை புறக்கணித்து ரஜினி அவர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அதை ஏற்று எனது உறவினர்களும் நண்பர்களும் டிக்கெட்டை கேன்சல் செய்து உள்ளனர். அதுபோல நீங்களும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழருக்கு எதிராகப் பேசும் ரஜினி நடித்த காலா படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.

தூத்துக்குடி ,நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பல கள போராட்டங்களுக்கு செல்ல முடியாத நாம் இதுபோன்ற கருத்துக்களை நமது தமிழ்ச் சமூகத்தில் விதைத்து ரஜினி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய தமிழர்களைப் போல வளைகுடா வாழ் தமிழர்களும் தமிழ் உணர்வு மிக்கவர்கள் என்பதை பறைசாற்றும் நேரமிது.