கடந்த 2003ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் காக்க காக்க. இந்த படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் கடந்து விட்டது.
கடந்த 2001ம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கிய கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான தமிழ் திரைப்படம் தான் காக்க காக்க.
நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், Friends, நந்தா, உன்னை நினைத்து, ஸ்ரீ மற்றும் மௌனம் பேசியதே என்று தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த சூர்யாவிற்கு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் காக்க காக்க. ஏ சி பி அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மிக நேர்த்தியாக நடித்திருப்பார்.
அப்போ அதெல்லாம் சும்மாவா? நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கவின்! மணமகள் பற்றி வெளியான தகவல்!
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த இரு புகைப்படங்களை வெளியிட்டு, படக்குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சூர்யா.
அன்புச்செல்வன் எப்பொழுதும் என் மனதிற்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய அவர், இந்த திரைப்படம் குறித்தும், என் சக நடிகர்கள் குறித்தும் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் குறித்தும் ஜோதிகா தான் எனக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தினார் என்பர் கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்தும் காக்க காக்க திரைப்படம் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. கடந்த 26 ஆண்டுகளாக நடித்து வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!
