முதல் மூன்று படங்கள் சூப்பர் ஹிட், அடுத்த மூன்று படங்கள் அட்டர் ஃப்ளாப் என்ற விநோதமான கேரியர்கிராஃபுடன் சூர்யாவை வைத்து தனது ஏழாவது படத்தை இயக்கிவருகிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த்.

தற்போதைக்கு ’சூர்யா 37’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு தலைப்பு வைக்க ரசிகர்களுக்கு அழைப்பு விட்டிருந்த கே.வி. ஆனந்த் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் , “கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ‘சூர்யா37’ படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்” என்று வாக்கெடுப்பு தொடங்கி அதற்கு “மீட்பான், காப்பான், உயிர்கா” என மூன்று பதில்கள் கொடுத்திருந்தார்.

மூன்று தலைப்புகளுமே படு சொதப்பலாக இருக்கு. வேறு ஏதாவது நல்ல தலைப்பு வைக்கலாமே என்ற கமெண்டுகளே அதிகம் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே படத்தின் தலைப்பை முடிவு செய்துவிட்டே வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே கே.வி. ஆனந்த், ஹீரோ சூர்யாவின் வழிமொழிதலுடன்  இப்படி ஒரு மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பதை அவரது படக்குழு வட்டாரம் உறுதி செய்கிறது.

அத்தகவல்களின் அடிப்படையில் ‘காப்பான்’ என்ற டைட்டிலை உறுதி செய்தபிறகே மேலும் இரண்டு டம்மி டைட்டில்களை உருவாக்கி கே.வி. ஆனந்தும் நடிகர் சூர்யாவும் இப்படி ஒரு கேவலமான ஸ்டண்ட் அடித்திருப்பது விரைவில் வெளிவரும்.