'சர்கார்’ பிரச்சினையில் அப்பா எடுத்த முடிவுகளுக்காக என்னை ஆயிரம் திட்டு திட்டுங்கள். அதற்காக அடிக்கடி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் ஒருவன் நான் இல்லை. எனக்கு என்றைக்குமே விஜய் அண்ணா விஜய் அண்ணாதான்’ என்கிறார் சாந்தனு பாக்கியராஜ். 

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவராக பாக்கியராஜ் ‘சர்கார்’ படத்துக்கு எதிராக எடுத்த முடிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் அவரது மகன் சாந்தனு. படம் இல்லாம வீட்டுல சும்மாதான இருக்கே என்றபடி விஜய் ரசிகர்கள், சாந்தனுவும் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்று தெரிந்திருந்தே அவரை கலாய்த்துக்கொண்டே இருந்தார்கள். கூடவே துரோகி பட்டங்களையும் சாந்தனு வாங்கிக்கட்டிக்கொண்டார். 

இந்நிலையில் பாக்கியராஜின் ராஜினாமாவுக்கும் சாந்தனு பதில் சொல்லவேண்டிய அவசியத்துக்கு தள்ளப்பட்டார். இம்முறை அவரை வம்பிழுத்தது விஜயின் எதிர்முகாம். ‘பாத்தியா சண்டி.வியும், விஜய் கோஷ்டியும் உங்க அப்பாவை வச்சு செஞ்சுட்டதைப் பாத்தியா’ என்று வரிசையாய் கமெண்டுகள் வரவே கொந்தளித்துப்போனார் சாந்தனு. 

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது அறிக்கையில் கூறியது போல அப்பாவின் சொந்த முடிவு. சர்கார் பட குழுவோ சர்கார் படக்கதை விவகாரமோ இதற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் கிடையாது. தவறான குற்றச்சாட்டுகளையும், தவறான யூகங்களையும் உருவாக்குவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்” என்று பெரிய கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறார் சாந்தனு.