Asianet News TamilAsianet News Tamil

ராஜினாமா செய்யவேண்டிய அளவுக்கு பாக்கியராஜுக்கு இருந்த நிர்பந்தங்கள் என்னென்ன?

யாரும் எதிர்பாராத வகையில் இன்று நண்பகல் தனது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள பாக்கியராஜ், இதன்மூலம் கதைப் பஞ்சாயத்து விவகாரங்களில் கையாளாத்தனமாக நடந்துகொள்ளும் தனது சங்கத்தின் சட்டைக்காலரைப் பிடித்து உலுக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

K Bhagyaraj Resigned What pressures?
Author
Chennai, First Published Nov 2, 2018, 1:26 PM IST

சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகிய மூவரையும் இன்றைக்கு ‘சர்கார்’ படத்தின் ஒரிஜினல் ஹீரோ இயக்குநர் பாக்கியராஜ்தான். யாரும் எதிர்பாராத வகையில் இன்று நண்பகல் தனது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள பாக்கியராஜ், இதன்மூலம் கதைப் பஞ்சாயத்து விவகாரங்களில் கையாளாத்தனமாக நடந்துகொள்ளும் தனது சங்கத்தின் சட்டைக்காலரைப் பிடித்து உலுக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். K Bhagyaraj Resigned What pressures?

சர்கார்’ விவகாரத்தில் கோர்ட் மூலமே தன்னால் நியாயத்தை நிலைநாட்டமுடிந்தது.  சங்கத்தை மீறி இது இந்த அளவுக்கு வந்ததில் தனக்கு வருத்தமே என்று பாக்கியராஜ் கூறியிருந்தார். பாக்கியராஜ் தலைவர் பதவியிலிருந்தாலும், அவருக்கு எதிராக செயல்பட்டு வந்த ஆர்.கே. செல்வமணி போன்றவர்களை மிறி அவரால் செயல்படமுடியவில்லை. மேலும் சில உறுப்பினர்கள் விஜய் ரசிகர்கள் மூலம் பாக்கியராஜை தொடர்ந்து மிரட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது. K Bhagyaraj Resigned What pressures?

இதை ஒட்டி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாக்கியராஜ்,’ முறையாக தேர்தலில் போட்டியிடாமல் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்வானதுதான், நான் நினைத்ததை சங்கத்தில் செயல்படுத்தமுடியாமல் போனதற்குக் காரணம் என்று நினைப்பதால்தான் ராஜினாமா செய்கிறேன். சங்கத்தில் நடக்கும் தவறுகளை சரிசெய்ய முறைப்படி தேர்தலில் நின்று ஜெயித்துவர விரும்புகிறேன். விரும்பினால் மற்றவர்களும் ராஜினாமா செய்து விரைவில் தேர்தலைச் சந்திக்கலாம். ஆறுமாசத்துக்குள்ள மறுபடியும் தேர்தலான்னு கேட்டா, பணம் தானே செலவாகும். சங்கமே வீணாப்போறதுக்குப் பதில் பணம் வீணாப்போனா பரவாயில்லை என்றுதான் சொல்வேன். K Bhagyaraj Resigned What pressures?

சங்கத்தில் நான் சந்தித்த சங்கடங்கள் குறித்தோ வேறு ஏதேனும் தகவல்கள் குறித்தோ இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் எதுவும் பேசுவதாக இல்லை. என் ராஜினாமா குறித்து மற்றவர்கள் என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு எனது பதிலைச்சொல்வேன். அதனால் என்னிடம் இப்போது கேள்விகள் கேட்டால் நான் பதில் சொல்வதாக இல்லை. எதுவாக இருந்தாலும் இரு தினங்களுக்குப்பின் தொடர்புகொள்ளுங்கள்’ என்று விடைபெற்றார் பாக்கியராஜ்.

Follow Us:
Download App:
  • android
  • ios