நிர்பந்தத்தால் கே. பாக்கியராஜ் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் திரையுலகினர்!

சர்கார் கதைத்திருட்டு விவகாரத்தில் சங்கத்தின் மூலம் தீர்த்துவைக்க முடியாத நிலையிலும் கோர்ட் வரை சென்று வென்ற கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் சற்றுமுன்னர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலிருந்து  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

K Bhagyaraj Resigned

தமிழ்த்திரையுலம் இதுவரை காணாத அளவில் ‘சர்கார்’கதைத் திருட்டு விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கடைசிவரை நின்று போராடிய பாக்கியராஜ், முருகதாஸிடம் கதைக்கான அங்கீகாரத்தை கோர்ட் வரை சென்று பெற்றுத்தந்தார். இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் பாக்கியராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. K Bhagyaraj Resigned

இந்நிலையில் தனக்கு நேர்ந்த சங்கடங்கள், அசெளவுகர்யங்களால் ராஜினாமா செய்வதாக சற்றுமுன் வெளியிட்டிருக்கும் ஒரு கடிதம் மூலம் சொல்லியிருக்கும் பாக்கியராஜ் சங்கத்தின் நலன் கருதி அவற்றை தற்போது வெளியே சொல்லவிரும்பவில்லை என்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios