அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதும் போல்  இந்த படமும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நிலவி  வரும் கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது.

எனவே  'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின்  தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மேலும்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில் தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி, ஓடிடி தளத்தில் 'பொன்மகள் வந்தாள்' ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையும் 'பொன்மகள் வந்தாள்' படத்திற்கு கிடைத்துள்ளது. 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் ஆக உள்ளது. 

ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட சூர்யாவிற்கும், அவரை சார்ந்த  நிறுவங்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் வந்த போதிலும் நினைத்ததை சாதித்து காட்டியுள்ளார்.