ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் உங்களுக்கு சவுகரியமாக இருந்த நடிகர் யார்?’ என்று அவரிடம் கேட்டதற்கு, “சூர்யா, அஜித், மாதவன், விதார்த்! ஆகியோர் எனக்கு சவுகரியமாக இருந்தனர்!’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், சர்ச்சை என்றாலே அது இப்போதைக்கு விஜய்! என்றாகிவிட்டது. சர்கார் பஞ்சாயத்து உச்சம் தொட்டிருக்கும் நிலையில், விஜய் ரிலேடட் ஆக என்ன கொளுத்திப் போட்டாலும் அது அதிரடி சரவெடியாக வெடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பத்திரிக்கைகளும், மீடியாக்களும் பற்ற வைத்தது பத்தாது என்று ஜோதிகாவும் கூட ஒரு ரகசியத்தை உடைத்துவைக்க, அது இப்போது விஜய்க்கு எதிராக பற்றிக் கொண்டு எரிகிறது கன்னாபின்னாவென. விஷயம் இதுதான்....ஜோதிகாவை ‘நடிப்பில்’ உச்சம் தொட வைத்த இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. 

இந்நிலையில் பேட்டி தட்டியிருக்கும் ஜோதிகா, சினிமாவில் பெண்களை மட்டும்தான் ஜோக்கர் போல் காட்டுகிறார்கள், ஆண்களை புத்திசாலிகளாக காட்டுகிறார்கள்! என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். கூடவே தனக்கு வரும் புதுப்படங்களின் கதையை தானும், சூர்யாவும் சேர்ந்து கேட்டுவிட்டு கலந்து பேசி முடிவெடுப்போம்! என்று கூறியுள்ளவர், இருந்தாலும் இறுதி முடிவு தன்னுடையதுதான் என்றும் சமாளித்திருக்கிறார். 

இந்நிலையில், ‘ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் உங்களுக்கு சவுகரியமாக இருந்த நடிகர் யார்?’ என்று அவரிடம் கேட்டதற்கு, “சூர்யா, அஜித், மாதவன், விதார்த்! ஆகியோர் எனக்கு சவுகரியமாக இருந்தனர்!’ என்று கூறியுள்ளார். ஆனால் ஜோ பீக்கில் இருந்தபோது அவருக்கு வாய்ப்பு கொடுத்து நடித்த மெகா மாஸ் நடிகர் விஜய். அவரது பெயரை ஜோ குறிப்பிடாமல் விட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 
ஏற்கனவே சர்கார் விவகாரத்தில் விஜய்யின் பெயர் தாறுமாறாக உருட்டப்படும் நிலையில், கோடம்பாக்க குறும்பு பேர்வழிகள் சிலர் ‘தளபதி பெயரை ஜோ சொல்லாம போனதற்கு பின்னணி காரணங்கள் ஏதாச்சும் இருக்குமா?’ என்று கோக்குமாக்காக ஆராய்ந்து, அலசல்களை தெறிக்க விடுகின்றனர். 

ஜோ போட்ட லிஸ்ட், விஜய்யின் காதுகளுக்கும் போக, அவர் அப்செட் ஆகிவிட்டாராம். அதேவேளையில் அவரது ரசிகர்களோ “ரஜினி, கமல், விக்ரம் கூடவும்தான் அந்தம்மா (ஜோ!தான்) நடிச்சாங்க. அவங்க பெயரையும்தான் சொல்லலை. அப்போ இதுல அவங்க தலையையும் உருட்ட வேண்டிதானே?” என்று கடுப்பாகின்றனர். இது எப்டியிருக்கு!?