நடிகை ஜோதிகா சசிகுமாருக்கு தங்கையாக நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 

நடிகை ஜோதிகா சசிகுமாருக்கு தங்கையாக நடித்துள்ள 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'கத்துக்குட்டி' என்ற படத்தின் இயக்குனர் து ப சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'உடன்பிறப்பே'. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிக்குமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: யங் லுக்கில்... லெஹங்கா அணிந்து மிதமான கவர்ச்சியில் மெர்சலாக்கும் கஸ்தூரி!! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்...

தமிழ் சினிமாவில் எப்போதுமே அண்ணன் தங்கை சென்டிமெண்ட் படங்களுக்கு தனி இடம் உண்டு. பாசமலர் சிவாஜி கணேஷ் - சாவித்ரி, கிழக்கு சீமையிலே விஜயகுமார் - ராதிகாவில் ஆரம்பித்து அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் தமிழ் சினிமாவில் கல்லா கட்டுவது நிச்சயம். சமீபத்தில் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான அண்ண - தங்கை சென்டிமெண்ட் படமான எங்கள் வீட்டு பிள்ளை கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வசூலில் குறைவைக்கவில்லை.

மேலும் செய்திகள்: தொடையாழகி ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு... ஷார்ட் ஸ்கர்ட்டில் போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா!!

அதேபோல் உடன்பிறப்பே படத்தில் தங்கையாக வரும் ஜோதிகா அண்ணன் சசிகுமார் மற்றும் கணவர் சமுத்திரகனி இடையே மாட்டியே எப்படி அல்லாடுகிறார் என்பதை கதையம்சமாக வைத்து தான் இந்த படத்தில் நடித்துள்ளர். இதுவரை நடித்த படங்களை விட, இந்த படத்தில் ஜோதிகா மிகவும் முதிர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளர். இப்படம் ஏற்கனவே அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் தேதி வெளியிடாமல் இருந்தது படக்குழு. இந்நிலையில் சற்று முன்னர் இப்படம், அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.