யங் லுக்கில்... லெஹங்கா அணிந்து மிதமான கவர்ச்சியில் மெர்சலாக்கும் கஸ்தூரி!! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்...
நடிகை கஸ்தூரி, வெள்ளை நிற கிராண்ட் லெஹங்கா உடை அணிந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள்... ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை.
எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, மிதமான கவர்ச்சியில் பார்பி பொம்மை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு வெள்ளை நிற கிராண்ட் லெஹங்கா உடை அணிந்து கவர்ச்சிக்கு குறை வைக்காமல் பொளந்து கட்டியுள்ளார்.
சமூக பணிகள், திரைப்படம் என பிசியாக இயங்கி கொண்டிருக்கும் கஸ்தூரியின் கைவசம் தற்போது 'தமிழரசன்' மற்றும் 'உன் காதல் இருந்தால்' ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.
குஷ்பூவை தொடர்ந்து தற்போது கஸ்தூரி, முன்பு இருந்ததை விட உடல் எடையை குறைத்து, ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.