Junior NTR Devara : பிரபல நடிகர் ஜூனியர் NTR நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான தேவரா திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று மாபெரும் ஆக்சன் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் தான் மாபெரும் நடிகரும், அரசியல் தலைவருமான என்.டி ராமராவ் அவர்களுடைய பேரன் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிக்க துவங்கிய போது பல விமர்சனங்களை எதிர்கொண்டு நடிக்க துவங்கினார். குறிப்பாக தனது பருமனான உடலின் காரணமாக பல நேரங்களில் உருவாக்கேலியும் செய்யப்பட்டார்.

ஆனால் அதன் பிறகு தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கி இன்று தெலுங்கு திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் உச்சகட்ட நாயகர்களில் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார் ஜூனியர் NTR. குறிப்பாக அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ராஜமௌலியின் RRR திரைப்படம் இவருக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. 

"ராமர் கோவில் மட்டும் போதாது.. பாபருக்கு மசூதியும் வேண்டும்" - நடிகர் நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோ!

மேலும் தற்பொழுது Koratala சிவா இயக்கி வரும் "தேவரா" என்கின்ற திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தேவரா திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் நடிகர் சைப் அலி கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

YouTube video player

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் நிலையில் கடற்கொள்ளையர்கள் சார்ந்த கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு பல கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது. ஏற்கனவே ஏப்ரல் 5ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாவது சந்தேகமே என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Women Directors: சோதனைகளை கடந்து... தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை தூண்களாக மாறிய பெண் இயக்குனர்கள்!