Asianet News TamilAsianet News Tamil

ஜுன் 23 ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் !! விஷாலை எதிர்க்கும் ராதிகா !! சபாஷ் சரியான போட்டி !!

ஜுன் 23 ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் !! விஷாலை எதிர்க்கும் ராதிகா !! சபாஷ் சரியான போட்டி !!

June 23 rd actors union  election
Author
Chennai, First Published May 28, 2019, 9:44 PM IST

2015ம் ஆண்டு நடைபெற்ற  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியும், சரத்குமார்-ராதாராவி அணியும் நேரடியாக மோதின, இதில் விஷால் அணி வெற்றி பெற்றது. இதில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

June 23 rd actors union  election

இந்த அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. ஆனால் நடிகர் சங்க வேலைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

June 23 rd actors union  election

இதையடுத்து அண்மையில் நடைபெற்ற நடிகர்  நடிகர் சங்க கூட்டத்தில் தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமயில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இதற்கான ஆவணங்களையும் நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார்.

June 23 rd actors union  election

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

June 23 rd actors union  election

இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாயியுள்ளது.

அவர்களை எதிர்த்து ராதிகா களம் இறங்குவார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் ராதிகா தலைமையில் எதிரணி களம் இறங்க உள்ளது. சபாஷ் சரியான போட்டிதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios