July 10 is the release of Vivekams next song Thala Liberation
“தல விடுதலை” என்ற விவேகம் படத்தின் அடுத்த பாடல் ஜூலை 10-ஆம் தேதி ரிலீஸ் பண்றோம் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விவேகம்.
இதன் சிறப்பு 90 சதவீதம் படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் அஜித், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
அஜித் உடன் இந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் டீசர் மற்றும் சர்வைவா என்ற ஒரு பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அடுத்தப்படியாக விவேகம் படத்திலிருந்து மற்றுறொரு பாடலை ரிலீஸ் செய்ய உள்ளதாம் படக்குழு.
"தல விடுதலை" எனத் தொடங்கும் இப்பாடல் வருகிற ஜூலை 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடலை இயக்குநர் சிவாவே எழுதியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.
