பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் நெருங்கியுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் பரபரப்பான பல சம்பவங்கள் அடைந்தது அதில், தமிழச்சி, ஜல்லிக்கட்டு நாயகி போன்ற ஆட்டங்களோடு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஜூலி, ஓவியா விஷயத்தில் டபுள் கேம் ஆடியதால் அவரின் உண்மையான முகமும் வெளிப்பட்டது.  ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்களிடையே பிரபலமான ஜூலி, மொத்த போரையும் டேமேஜ் செய்துகொண்டுள்ளார்.

மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு எந்த ளவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததோ, அதற்கு நேர் மாறாக  மக்கள் எதிர்ப்பு  ஜூலிக்கு இருந்தது.  இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜூலி சென்றுள்ளார். அப்போது ஜூலி மேடையேறி பேச ஆரம்பிக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் ஓவியா வாழ்க, ஓவியா வாழ்க என்று பலத்த கோஷம் எழுப்பினர். அதற்கு நீங்க என்ன கத்தினாலும் எதுவும் நடக்கப் போறதில்லை என்று ஜூலி கூறினார். அடுத்ததாக நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்று கண்கலங்கிய படியே, மேடையிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.