Julie plays Vijay sister role Oviya said no

விஜய்-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க ஓவியா மறுப்பு தெரிவித்ததால் அந்த இடத்தில் ஜூலியை நடிக்க வைக்க உள்ளதாம் படக்குழு.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் விஜய் 62.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிக்பாஸ் புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தான் ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி அந்த வாய்ப்புக்கு நோ சொல்லிவிட்டாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள எந்தப் படமும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், பல படங்களை சம்பளம் தொடர்பாக நிராகரித்துள்ளார் ஓவியா என்பது கொசுறு தகவல்.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைந்துள்ள அந்த படத்தில் ஓவியா நடிக்க மறுத்ததால் அவருக்குப் பதிலாக ஜூலியை அந்த கதாபாத்திரத்தி நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கசிகின்றன.

விஜய்க்கு தங்கச்சி ஜூலியா? செம்ம டெரரா இருக்கும்ல...