julie follow this proverb

கடந்த ஆறு மாதங்களாக பெரிதும் பேசப்பட்ட "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜூலி, நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்களின் ஆதரவை பெற்றாலும் பிறகு அவரது நடவடிக்கைகளால் மக்களிடம் இருந்து போலி என்கிற பெயரை தான் சம்பாதித்தார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் திரைபடம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிஸியாகியுள்ளனர். இந்நிலையில் ஜூலியும் பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் திரைப்படகளில் கதாநாயகியாக நடிக்கவும் ரகசியமாக ட்ரை பண்ணிட்டு இருக்காராம்.


 இந்நிலையில் 24 /11 /2017 அன்று நடைபெற்ற நடிகை நமிதாவின் திருமணத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் சக்தி, காயத்ரி , ஆர்த்தி, ரைசா உள்ளிட்டோர் சென்று இருந்தனர் சிநேகனும் ஒரு சில காரணத்தால் வரமுடிய வில்லை என தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார் , ஆனால் எல்லாவற்றிலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் ஜூலி திருமணத்திற்கு செல்லவில்லை.


 ஜூலி திருமத்திற்க்கு செல்லாததற்கு கரணம், நமீதா அவரது பிக் பாஸ் ஹவுஸ்மேட்டான ஜூலிக்கு பத்திரிக்கை வைக்க வில்லையாம். அழையாத இடத்திற்கு செல்ல கூடாது என்று ஜூலியும் செல்லவில்லையாம். இதனை கேள்வி பட்ட நெடிசன்கள் ஜூலியை காமெடி பீஸ் என கலாய்த்து வருகின்றனர்.