பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், முன்பு நடந்த சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு சினேகனிடம் நியாயம் கேட்கிறார் ஜூலி. 

மேலும் "ஏன் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறீங்க,  ஜூலியை யாருமே அவங்கள்ல ஒருதரா பார்க்க வில்லை... அதே போல் நிறைய விஷயங்களை ஏன்  என்னுடைய  பின்னாடி பேசுறீங்க. அதனை தனக்கு படம் போட்டு காண்பிக்கும்போது என்னுடய நிலைமை எப்படி இருக்கும் என சினேகனிடம் ஜுலீ கேட்கிறார்.

உடனே சினேகன் நான் உன்னை நாமினேட் பண்ணியதே இல்லை என கூற, நீ என்னை நாமினேட் பண்ணிருக்க அண்ணா பொய் சொல்லாதே என ஜூலி சினேகனிடம் கூறுகிறார்.

மேலும் மூஞ்சை சோகமாக வைத்துக்கொண்டு வெளியில் எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்ன தெரியுமா? என சினேகனை பார்த்து கேட்கிறார்... போலி என்று தான் தன்னை அனைவரும் கூறுகின்றனர், அதற்கு சினேகன் எதோ கூற வர அவரை தடுத்தி நிறுத்தி, அந்த போலி என்கிற வார்த்தையை ஆரபித்து வைத்ததே நீங்கள் தான் என சினேகனிடம் கூறுகிறார். 

இதை கேட்டதும் சினேகன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் ஜூலியை பார்க்கிறார். உண்மையில் தன்னை பாவமாக காட்டிக்கொள்ள ஜூலி இதுபோன்ற கேள்விகளை சினேகனிடம் கேட்டாலும் அந்த இடத்தில் சினேகன் தான் பாவமாக தெரிந்தார். அதே போல ஒருவர் போலி என்று அழைப்பதால் அவர் போலியாக மாறப்போவது இல்லை... உண்மை இல்லாதவர் ஜூலி என மக்களே தெரிந்துகொண்ட பிறகுதான் அப்படி அழைக்க தொடங்கினர் என்பது இன்னுமா அந்த ஜூலிக்கு புரியவில்லை.