ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமாகி இருப்பவர் ஜூலி. ஆரம்பத்தில் அனைவராலும் மிகவும் எதிர்க்கப்பட்ட இவர் பொய் சொல்லுவது, கோள் மூடுவது என அனைவரையும் எரிச்சல் மூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை யாருக்கும் பிடிக்காமல் போனது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ள ஜூலி என்ன நிலையில் இருக்கிறார் என அவருடைய தம்பி ஜோஷ்வா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சனிக்கிழமை அன்றே ஜூலி வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தார். அதை பார்த்து விட்டு மிகவும் வேதனைப்பட்டார் என்றும் தற்போது அவர் இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார் எனவும் தெரிவித்தார். 

இரண்டு மாதத்திற்கு பின் சகஜமாக அவருடைய வேலையை தொடர்வார்... அதே போல ஜூலிக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக  வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜூலி கண்டிப்பாக நடிகையாக ஆகமாட்டார் என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் செய்த தவறுகளை சுட்டி காட்டி அவருடைய மனம் நோகுவது போல் பலர் நடந்து வருகின்றனர் என மிகவும் வேதனையோடு ஜூலியின் தம்பி ஜோஷ்வா தெரிவித்துள்ளார்.