julie begged with gayathri just live me a gap

என்னை ஒரு வாரம் வைத்து பாடாய்படுத்தியது போதும், ஒரு வாரமாவது கேப் விடுங்க என்று ஜல்லிக்கட்டு பிரபலம் ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெஞ்சி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டு பிரபலமான ஜூலியை வைத்து டிஆர்பி ரேட் எகிறியது.

அதில் முழுக்க முழுக்க ஜூலியை டார்கெட் செய்தே காட்சி கோப்புகள் இடம் பெயர்ந்தன. இதனால் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக இருந்த ஜூலியை எவ்வளவு கழுவி ஊற்ற முடியுமோ அவ்வளவு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இதைதொடர்ந்து வெளியேறும் பட்டியல் வரை வந்து தப்பித்து சென்றார் ஜூலி. கடைசி எபிசோடில் ஜூலி தப்பித்து அனுயா வெளியேறினார்.

அனுயா வெளியேற்றப்பட்ட்திற்கு காரணம் மொழி புரிதலே என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், ஜூலி, கஞ்சா கருப்பு, சக்தி ஆகியோர் அமர்ந்து பேசி வருகின்றனர்.

அப்போது, காயத்ரி ரகுராம் இனிமேல் மொழி தெரியாதவர்களை வெளியே அனுப்ப கூடாது என்றும் அதற்கு பதிலாக ஜூலியை வெளியேற்ற சஜசன் கூறலாம் என்றும் கூறுகிறார்.

அதை கேட்ட ஜூலி என்னை ஒரு வாரம் வைத்து பாடாய்படுத்தியது போதும், ஒரு வாரமாவது கேப் விடுங்க என்றும் கெஞ்சினார்.