பிக் பாஸ் புகழ் ஜூலி, தற்போது அம்மன் தாயி எனும் பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன தான் பிக் பாஸ் மூலம் எதிர்மறையான புகழை அவர் சம்பாதித்திருந்தாலும் இன்று திரைத்துறையில் அவர் நினைத்தபடி தொடந்து முன்னேறி கொண்டு தான் இருக்கிறார் ஜூலி. 

ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் இவரின் கைவசம் சில திரைப்படங்களும் இருக்கின்றன. கேசவ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ்வரன் மற்றும் சந்திரஹாசன் என இரண்டு இயக்குனர்கள் இந்த அம்மன் தாயி படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஜூலி தான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதுவும் அம்மனாக. 

ரம்யா கிருஷ்ணன், கே.ஆர்.விஜயா போன்றோரை அம்மனாக பார்த்து பழகிய எங்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும், ஜூலி ஆர்மிக்கு இதெல்லாம் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. இந்த அம்மன் தாயி படத்தின் டிரைலர்  தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரில் ஜூலி சம்பந்தப்பட்ட காட்சிகள், மற்றும் மந்திரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணீர் குரலில் “அழைக்கட்டுமா தாயே?” என தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார்.  இந்த டிரைலர் கடைசியில், செத்தவ நீ திரும்பி வந்திருக்கா, உன்ன அழிக்க நான் விரும்பி வந்திருக்க... இனிதான் சூர சம்ஹாரம் என ஓவர் ஏமோஷியனாக டயலாக் பேசியுள்ளார் ஜூலி.