ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கண்டபடி கத்தி, கோஷம் போட்டு, பிரபலமானவர் ஜூலி. இந்த போராட்டத்தின் மூலம் இவர் அனைவருடைய பார்வையிலும் பட்டாலும், இவரை மேலும் பிரபலமாக்கியது என்றால் அது, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான்.

பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சாதாரண ஒரு பெண்ணாக உள்ளே நுழைந்த இவருக்கு ஆரம்பத்தில்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், நாளடைவில் இவர் செய்த சில விஷயங்கள் மக்களுக்கு இவர் மீது கோபத்தை தூண்டியது.அன்று மீம்ஸ் மூலம் இவரை விமர்சிக்க துவங்கிய நெட்டிசன்கள் இன்று வரை, ஓயாமல்  ஜூலி  என்ன செய்தாலும் அதனை கலாய்த்து வருகிறார்கள்.

குறிப்பாக கொரோனா வைரஸால், பலர் அவதி பட்டும் வரும் நிலையில், ஒரு நர்ஸாக இருந்து கொண்டு விதவிதமாக  போட்டோ போடுறியா என சில நெட்டிசன்கள் இவரை வச்சி செய்து வருகிறார்கள்.மேலும், சினிமாவின் பக்கம் வந்துவிட்டதால் இவர் தான் புனிதமாக கருதுவதாக கூறிய நர்ஸு  தொழிலை மறந்து விட்டதாகவும் சில கூறினர். இந்நிலையில் ஜூலி தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் உண்மையிலேயே அனைவரையும் மெர்சலாக்கியுள்ளது.

அதாவது அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்க ஜூலி பயிற்சியை முடித்துள்ளதாகவும் விரைவில் அவர் தனது புனிதமான நர்ஸிங் சேவைக்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நெருக்கடியான சமயத்தில் புனிதமான செவிலியர் சேவைக்கு திரும்புவதே சிறந்தது என்று ஜூலி உணர்ந்து கொண்டார். இந்நிலையில்,  ஜூலி தனது ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் எப்போதும் கிண்டல் செய்தவர்கள் கூட வாழ்த்துக்கள் போட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன்.