தற்கொலை

12 ம் வகுப்பு போதுத் தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. ஆனாலும் மனம் தளராத அனிதா உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.அனிதாவின் தற்கொலையால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

போஸ்டர்

அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் பேசப்பட்டதுடன் பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.நேற்று அனிதாவின் பிறந்தநாள்.எனவே இந்த பரபரப்பான விஷயத்தை கையிலெடுத்த தமிழ் திரையுலகம் படமாக எடுக்க முடிவு செய்தது.அதன்படி நேற்று அனிதா எம்.பி.பி.எஸ் என்ற தலைப்பிலான படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ஜூலி

இதில் அனிதாவின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார்.இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.மேலும் உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

போராளி

அடுத்த படமாக அரியலூர் அனிதா கதையில் நடிக்கிறார் ஜூலி. இந்த படத்தை கே 7 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மேலும் போராளி அனிதாவின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி நடிப்பதா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.