julee post the facebook am not expose my real character

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களை விட அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ஜல்லிக்கட்டு ஜூலி தான். இவர் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராடியவர் என்பதால். பலர் இவருக்கு தங்களுடைய ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இவருடைய நடவடிக்கைகள், மக்களுக்கு பிடிக்காமல் ஒரே வாரத்திலேயே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவருக்கு ஆதரவை தெரிவித்த அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலி பல நாட்களுக்கு பின் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

"வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்வளவு நாட்கள் நடித்ததை அவரே ஒப்புக்கொண்டார்.

மேலும் ஜூலியை நடிக்காதே என ஆர்த்தி கூறியபோதும், ஓவியா உன்னால் எப்படி இவ்வளவு நாட்கள் நடிக்க முடிகிறது என கேட்டபோது நான் நடிக்கவில்லை என கூறி வந்த ஜூலி. தற்போது தானாக முன்வந்து இது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.