julee parents face so many problems
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களால் கவனிக்கபட்டவர் ஜூலி.
செவிலியரான இவருடைய சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும், தன்னுடைய பெற்றோருடன் கிண்டியில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநராக இவருடைய தந்தை தன்னுடைய பெண்ணை சுதந்திரமான வளர்க்க வேண்டும் என எண்ணி ஜூலியை அவருடைய ஆசைப்படியே வளர்த்தார்.
தற்போது ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளதன் மூலம் அவருடைய சுய ரூபத்தை அனைவரும் தெரிந்துக்கொண்டனர்.
ஏற்கனவே ஜூலியின் தம்பி ஜோஷ்வா தன்னுடைய அக்காவை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று தன்னுடைய கருத்தை தெரிவித்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் ரசிகர் கூட்டத்தை கொண்ட ஓவியாவை தன்னுடைய நயவஞ்சக புத்தியால் பலரிடமும் திட்டு வாங்க வைத்து பச்சோந்தி போல் செயல்படுவதால், ஜூலியின் தந்தையை பார்க்கும் பலர் ஜூலியை அவரிடமே திட்டுகின்றனராம்.
இதனால் அவர் ஆட்டோ ஓட்டுவதற்கே போவதில்லையாம். அக்கம் பக்கத்தினரும் ஜூலியின் உண்மையான முகத்தை அறிந்து கொண்டதால் தொடர்ந்து அவருடைய அம்மாவிடம் கேட்பதால், இவருடைய பெற்றோர்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
